experimenting the life
Posted by mangaimano on February 20, 2008
பள்ளியில் படித்த நியாபகமில்லை
புத்தகத்தில் எழுத்துக்கள் பதியாத இடத்தில்
படித்தபாடம் சிலநேரம் எழுதும் மேசைகளில்
ஆசிரிய மனிதர்கள் நடத்தியபாடம்
எதிரியிடம் நட்பை ரசித்த பாடம்
நண்பனிடம் விரோதத்தை உதாசனப்படுத்திய பாடம்
பூக்கள் மீது முட்கள்நடத்திய பாடம்
பனிமலைக்குள் எரிமலை நடத்தியபாடம்
போர்க்களத்தில் மரணங்கள் நடத்திய பாடம்
சாம்பளாகிப்போன பறவை ஒன்று
என்னைநோக்கி பறந்து வந்து
பொறுமையாக சொன்ன பாடம்
ஒவ்வொறு தோல்வியிலும் படிக்கப்பட்ட வெற்றி
சில வெற்றிகளில் படிக்கப்பட்ட தோல்வி
மனமில்லை இருந்தும் தேர்வுகள் எழுதச்செல்கின்றேன்







