சூரியனை எரிக்கும் விழா!
வானப் பறவைகளுடன் திட்டம்
பீனிக்ஷ்களுடன் ஆலோ சனைக் கூட்டம்
கடிக்கப்பட்ட நெருப்புத்துண்டுகள்!
இன்று அவனையே தாக்கும்!
கத்தி எடுத்தவனுக்கு கத்தியில் சாவு
நெருப்பை எடுத்தவனுக்கோ இன்று நெருப்பால்!
தேகம் எரிக்கும் மேனி இன்று கங்குகளாள் சுடப்பட வே ண்டும்!
இல்லை அண்டார்டிகா கடலில் நனைத்திட வேண்டும்1
அண்ட வெளிக்குள் கால்பந் தாய் உதைத்திட வேண்டும்!
தெர்மாமீட்டர் வைத்து வெப்பம் அளந்து ஊசிபூட வேண்டும்!
கையில் இருக்கும் குடையால் எட்டி அடிக்க வே ண்டும்!
இப்ப டியெல்லாம் எண்ணம் வந்தது இன்று மதியம்!
தோழி ஒருத்தி அய்யோ வெயிலென்று முகம் சுழிக்கையிலே!







