சாமி கும்பிடப் போனேன்
தெய்வ சாமி கும்பிட போனேன்
வீட்டில் மாட்டிக்கிடக்கும் சாமிகள்
அழுத்து போனதென “சாமி ” பார்க்க
தூணையும் துரும்பையும் தாண்டிபோனேன்
மாட்டுத் தோல்கள் உள்ளேவர
அனுமதி இல்லை அதனால்
மனித தோலுக்கு திருநீர் அணிய
காலணி துறந்தேன் சிலநிமிடங்களுக்கு
இலவசமல்ல இப்பொழுது இதுமட்டும்:)
அணிச்சை செயலாய் கன்னம் போட்டுக்கொண்டேன்
பிச்சை எடுப்பவரின் வறுமைஅளவை பார்த்து வாரித்தந்தேன்
கவளம் நம்பிக்கையில் தும்பிக்கைதூக்கும்
யானை உடம்பை பார்த்து பயந்துதான்
யானைமுகத்தானை தொட்டு வணங்கினேன்…
தமிழ்கடவுளிடம் கோரிக்கை சொல்ல
நினைத்துபோனமனம அவள் கட்டியிருந்த
சேலை நிறத்தில் மயங்கிப்போனது!!!!






