எண்ணங்கள் என்றுமே புரிந்து கொள்ளமுடியாதது .மூளை முடிச்சுகளில் அவிழ்ந்தும் அவிழ்க்கப்படாத எண்ணங்கள் எத்தனை ?எத்தனை ?விஷயங்கள் தோன்றியும் அழிந்தும் ஏன் சிலநேரம் பொசுக்கப்படுகின்றன..அந்த எண்ணங்கள் எழுத்தாகி தன்னால் மட்டும் படிக்கப்படும் பொழுது புத்தக இடிக்கில் மயிலிறகாய் நிம்மதியாக உறங்கும்..…சில சமயங்களில் கவிதை ,கதை
ஓவியம் என்று மயில் தோகையென விரிந்து உயிர்த்தாடும் !
படைப்பாளியின் படைப்புகள் என்றுமே ரசிகனின் ரசனைக்காக ஏங்குகின்றன !
படத்தின் பிரதிபலிப்பு கண்களிலும்,
இசையின் இனிமையை செவிகளிலும்,
உணவின் ருசியை நாவினிலும்,
நறுமணத்தின் நெடி நாசியிலும் ,
மென்மை தன்மைகளை உணரும் தொடுதளிலும்
ரசனைகளே உயிர்க்கின்றன .
உங்கள் ரசனைக்காக இதோ எனது எண்ணங்கள் மின்பக்கங்களில்!
இங்கே மின்பக்கங்கள்







