Aananda thandavam

ஆனந்த தாண்டவம் …..ரொம்ப நாள் எதிர்பார்த்தது .மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் புதினத்த படமாக்கப்படுகிறதுனு ,கேள்விப்பட்ட உடனே படம் வெற்றி பெறுமா என்று சந்தேகமாக இருந்தது.ஆனால் உண்மையாக இயக்குனர் காந்தி கிரிஷ்ணாவ பாராட்டியே ஆக வேண்டும் சில இடங்களில் தவறி இருந்தாலும் கூட உழைப்பு தெரிகிறது .ஏனென்றால் சுஜாதாவின் எழுத்துக்கள் சிந்தனைகள் அப்படி.

சில விஷயங்களை புத்தகதில் படிக்க நல்லா இருக்கும் சிலவற்றை படமா பார்க்க நல்லா இருக்கும்.சுஜாதாவே இதை உணர்ந்திருந்தார்.சில பேச்சுக்களில் சொல்லியும் இருக்கிறார்.1983 வெளி வந்த புதினம் சில ஆண்டுகளுக்குமுன் நான் படிக்க வாய்ப்பு கிடைத்தது.2009 வரையிலும் இன்னும் நம் சமுதாயம் மறவில்லையா.இல்லை தொலைநோக்குப் பார்வையின் சிந்தனையா ?தெரியவில்லை.

இன்னமும் ரகு போல இளைஞர்கள் இருக்கிறார்கள்.மதுமிதா ஒரு வெகுளி பெண்ணின் உருவம் மட்டுமல்ல. என்றுமே பெரும்பாலான பெண்களின் நிலை.ரத்னா கதாபாத்திரங்களும் உண்டு, அம்மு கதாபாத்திரங்களும் உண்டு.”loosu pen” கதாபாத்திரத்தை தமன்னா நன்றாக பிரதிபலித்திருக்கிறார்கள்.

ரகுவின் அப்பா மகன் உறவு, ஏமாற்றங்கள் அன்பு, அறிவுறைகள் ,நட்பு …சுஜாதாவின் முத்திரைகள்.கதையில் மகன் அப்பாவுடன் கடிதம் தொலைபேசி வாயிலாக பேசுகின்றதை இந்த காலத்திற்கு ஏற்றவாறு வலைநிழலி,நவீன மின்தூக்கி போன்ற புதிய தொழில் நுட்பங்களை சொன்னதற்காக இயக்குனருக்கு சபாஷ்.அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாழ்க்கையை நன்றாக சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால் முடிவு…புதினத்தில் நாம் ரசித்த முக்கியம் என்று கருதிய சில வழுவான காட்சிகளை(உதாரணம்: மதுவின் கடசி வார்த்தைகள்,இந்தியபெண்ணை திருமணம் செய்ய சொல்லும் வெள்ளைக்காரியிடம் ஏமாந்த ஆசாமி)படமாக்க தவறியது படத்தின் தோல்வி.அலைபாயும் மனம்,அறியாமை குணம்,சந்தர்ப்ப வாதம்,நம்பிக்கை த்துரோகம் மனித மனத்தின் எச்ச குணங்கள்.பாசம்,காதல்,நகைச்சுவை,நட்பு,குடும்பம் இவைதான் மனித குலத்தை காக்கும் புனிதங்கள்.

அது சரி பிரிவோம் சந்திப்போம் தலைப்பில் வேறு ஒரு படமிருக்கு …எதற்காக ஆனந்த தாண்டவம்னு பெயர் வைத்தார்கள்னு புரியவில்லை.

பிரகாஷின் இசையும் வைரமுத்துவோட வரிகளும் பெரிய பலம்.ஒரு வேலை சுஜாத உயிரோட இருந்திருந்தா இதை விட நல்லா படம் அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.சுஜாதா மற்றும் பல எழுத்தாளர்களின் எழுத்துக்கள் நல்ல படமாக வேண்டும்.ஆனால் உருகுலையக்கூடாது.

என்னன்னமோ எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்:(

http://en.wikipedia.org/wiki/Ananda_Tandavam_(film) .

Dont miss to read the novel.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: