ஐடியா! மொபைல் விளம்பரத்தின் அபத்தம் !

https://i2.wp.com/aishwaryaraifanclub.net/bollywoodblog/media/blogs/a/abhishek-bachchan-idea1-297x300.jpg

நாம் அனைவரும் சமீபத்தில் வந்த ஐடியா மொபைல் விளம்பரத்தைப் பார்த்திருப்போம் ரசித்திருப்போம்.அதாங்க அபிஷேக் பச்சன் ஆலமரமா வருவாரே விதம் விதமா அனிமேசன் விசயங்களோட வருமே(மேலே படம் இருக்குறத மறந்துட்டேன்!).(டீக்கடைல இருந்து பாஸ்போர்ட் வரைக்கும்)காகிதத்துக்கு பதில் இனிமே மொபைலையே பயன்படுத்தலாம்னு .. இப்படி மனுஷன் ஐடியா பண்ணி பண்ணியே தான் இயற்கையை அழிச்சுட்டு வருவான்..நம்மளும் புதுசா எதைச் சொன்னாலும் தலையாட்டி ஒத்துக்குறோம் .பகுத்து அறிய நினைக்கமாட்றோம்

நான் சொல்ல வரது என்னனா ஒரு வேலை இவங்க சொல்லுற மாதிரி மரங்கள காப்பாத்தலாம் அப்புறம் அதுல ஒக்காரதுக்கு பறவைகள் இருக்காது,மலர் செடிகள் இருக்காது ,கூடு கட்ட தேனிகள் இருக்காது..ஆமாங்க மொபைல் வந்ததுலருந்து அதுவும் உங்க வீட்டு பக்கம் மொபைல் டவர் வந்ததுலருந்து சிட்டு குருவிய பாத்துருக்கீங்களா? பலகோடி தேனீக்கள் காணாம போயிடுச்சாம் .செல்போன் பெருக்கம் சூழலை மின் காந்த அலைகளால் நிரப்பியிருக்கிறது . இவை இயற்கையான பூமியின் காந்த அலைகளைப் பயன்படுத்தி திசைகளை உணர்ந்து பயணிக்கும் தேனீகளையும் குருவிகளையும் குழப்பி மெல்ல மெல்ல அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றன என்பது ஆய்வாளர்களின் கருத்து .தேனீக்கள் போன்ற உயிர்கள் அழிந்தால் எப்படி இனப்பெருக்கம் நடக்கும்,செடி கொடிகள் வளரும் மொத்த விலங்கியல் சம நிலையும் (Ecological balance) பாதிக்கப்படும்.அதுகிடக்கட்டும் ஏற்கனவே மின்சாரம் பற்றாக்குறை:( இவ்வளவு மொபைலுக்கு எப்படி சார்ஜு  போடுவீங்க????..இப்படி எதையும் கருத்தில் கொள்ளாமல் விளம்பர நோக்கிற்காக ஒரு விஷயம் அதை சொல்ல ஒரு திரைப்பட நாயகன்,அனிமேஷன் வெளிப்பூச்சு …..அணுகுண்டு கண்டுபிடிச்சுட்டு வருந்தும் மனிதன் ,மொபைலுடன் பிறந்து, வளர்ந்து ,உறங்கி அனுபவித்துக் கொண்டிருக்கும் மனிதன் அதற்காகவும் வருத்தப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை!

“Use mobile Save Paper”         இவ்வாறு கூட மாறலாம்   Don’t use mobile Save Yourself(what an idea Humanji!)

——————————————————————————————————————————

Color Image source:http://aishwaryaraifanclub.net

நன்றி :குமுதம்(oct 2009)- “தேனீக்களைக் காணவில்லையாம்

————–

Tamilish

Advertisements

2 Responses to “ஐடியா! மொபைல் விளம்பரத்தின் அபத்தம் !”

  1. Karthik Says:

    erkanave chittu kurivigal kanama poiduchi

    • мαηgαι Says:

      நன்றி திரு கார்த்திக் !….அப்போ சிட்டு குருவி கூவுறத மொபைல் ரிங்டோனா தான் வச்சுக்க முடியும் போல:(


Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: