எங்கேயும் எப்போதும்…..

எங்கேயும் எப்போதும் கவனம் தேவை இல்லைனா…… கடைசியா சொல்றேன்

படம் பெயரே தெரியாம படத்தோட கதைகூட தெரியாம தியேடருக்கு போய் பார்த்த படம் …அதனால தானோ காதலும் சிரிப்புமா போய் கொண்டிருந்த திரைக்கதை மரணமும் அழுகையுமா மாறியதை ஏற்றுக்கொள்ள சில நிமிடங்கள் ஆனது நாட்கணக்கில் மனதிலேயே நின்றுகொண்டிருக்கிறது.இது போன்ற முதல் பாதி சுமூகமாயும் அடுத்த பாதி அழுகையாகவும் இருப்பதும்,அப்படிபட்ட படங்கள் பெருத்த வெற்றி பெறுவதும் வழக்கம் தான்.ஆனால் இதுவரை நாம் பார்த்த படங்களில் நாம் நம் நிஜ வாழ்வில் காண்பதும் எதிர்கொள்வதும் மிகக் குறைவு ,எடுத்துக்காட்டாக மைனா,சுப்ரமணியபுரம் .ஆனால் இதிலோ இந்த உலகத்தில் அத்தனை மனிதனின் வாழ்விழும் ஒன்றாகி போன சாலைப் பயணம்.சமீபத்தில் நடந்த பேருந்து விபத்துகளை மிகவும் நேர்த்தியாக கண் முன்னே காண்பித்து ,ஒவ்வொருவரின் மனத்திலும் பாடம் புகட்டி உள்ளனர்.

இப்பொழுதெல்லாம் விபத்துகளைப் பற்றி நாளிதழ்களில் படிக்கும் பொழுது மரணங்களின் எண்ணிக்கைகள் வைத்து வருத்தப்படும் நிலைமையில் இருக்கிறோம்.ஆனால் ஒவ்வொரு மரணத்தின் பின்னாலும் அவர்களின் அவர்கள் மீது அன்பு கொண்டோரின் கனவுகளும் எரிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.இதில் ஒவ்வொரு மரணத்திற்கு பிறகும் ஒரு உயிர்க்காவியம் சிறுகதையாய் சொல்லப்பட்டிருக்கிறது.மரணத்திற்கு பிறகும் வாழ உடலுறுப்புகள் தானத்தின் உன்னதத்தையும் எளிமையாய் சொல்லியிருக்கிறது.சில மணிநேரம் பிரயாணத்தில் ஏற்படும் பரிமாறல்களும் அன்பும் மனிதமும் கண்முன்னே வரையபடுள்ளது.

வாழ்க்கையில் அனைத்தையுமே மிகவும் நம்பிக்கையோடு கணக்குபோட்டு வாழும் ஒரு பெண்ணின் உறவும் ,ஒரு நாள் சந்தித்துக்கொண்ட உறவை தேடும் ஒரு பெண்ணின் நம்பிக்கையும் ் ஒரு பேருந்து விபத்தில் சிதைவதும் ,இணைவதுமே களம்.சாதாரணமாக நாம் செய்யும் காணும் விசயங்களை கவிதையாய் சொல்லி மெலிதாய் சிரிக்கவைத்திருக்கிரார்கள் .அழகான காதல் கதைகள்,உன்னதமான பிள்ளைப் பாசம் ,விதியால் தொடரப்பட்டு உடைக்கபட்ட அத்தனை உறவுகளின் வாழ்கையையும் சில மணிநேரங்களில் நாமே வாழ்ந்து முடித்தது போல் கனத்த இதையத்தொடு தான் வெளியேறுகிறோம்.

ஒரு சரித்திரம் மறுபடியும் தொடருமானால் , மனிதன் எத்தனை ஆற்றலற்றவன்..எத்தனை அசாகிரத்தை உள்ளவன் ,இன்னமும் தொடர்கிறது ஆளில்லா ரயில் விபத்துகள்,வானிலை மாற்றத்தினால் ஏற்படும் விமான விபத்துகள்,இன்னமும் இருவழிசாலை விபத்துகள்….இதுக்கு என்னதான் தீர்வு நாம ,சாலை விதிகளையும் நாகரிகங்களையும் அறிந்து நடப்போம்.

எங்கேயும் எப்போதும் கவனமும் நிதானமும் தேவை இல்லைனா கோவிந்தா கோவிந்தா ……….

Advertisements

One Response to “எங்கேயும் எப்போதும்…..”

  1. Kabilan Santhanam Says:

    yeap, i agree.. ths s something that can happen to any of us – any time.. “engaium eppothum”..


Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: