விலங்குகளை விளங்குவோமா ~2

   விலங்குகளை விளங்குவோமா ~ 1!

   டுத்த  நாள் படகு சவாரிக்கு ஆயத்தமானோம்….(JLR resorts)விடுதி மேலாளர் எங்களிடம் இங்கு உங்களுக்கு அதிர்ஷ்டமென்றால் சிறுத்தைகளை மற்றும் புலிகளை காணமுடியும் என்றார்.நான் அப்பாவியாய் பன்னர்கட்டா   ஜூவில் நிறைய புலிகள் பார்த்திருக்கிறேன்,வெள்ளைப்புலிகள் கூட பார்த்திருக்கிறேன் என்று சொல்ல ,அவர் முகத்தில் கோபம் படர்ந்தது :D.ஆம் கூண்டில் அடைத்து ரோட்டி துண்டு போல் மாமிசம் கொடுத்து வளர்க்கப்படும்  புலிகளுக்கும்,காட்டில் டெர்ரராய் விலங்குகளை வேட்டையாடி வாழும்  புலிக்கும் வித்தியாசம் உண்டுதான் !

அந்த விடுதி முன்னொரு காலத்தில்   வேட்டையாடுவதற்கு மைசூர் மகாராஜா தங்கியிருக்கும் இடமாம் . கபினி அணைக்கட்டின்  ஆற்றேரக்குட்டை(backwaters) கரையில்  விடுதி அமைந்திருந்தது .இந்த மூன்று மணி நேரப் பயணம் தரப்போகும் அனுபவங்களை எதிர்நோக்கி சூரிய உதயத்திற்கு முன் படகில் சில வெளிநாட்டு பயணிகளும் ஒரு கைடுமாக(guide) அமர்ந்தோம். அந்த கைடுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு மறக்கமுடியாத நினைவுதான்.இந்த காட்டுபகுதியில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் ஏராளம் ஏராளம்.அதில் கண்ணில் படும் சொற்ப காட்சிகளும் நமக்கு தரும் ஆச்சிர்யத்திற்கும் பிரமிப்புக்கும் ஈடு இணையே இல்லை. national geography,animal planet,discovery channel பிரியர்கள் நிச்சயம் சபாரியை(safari) (இழக்கக் கூடாது. ​

குளிரில் நடுங்கும் காட்டிற்கு கதகதப்பு தருவதற்காக இயற்கை அன்னை சூரியனை மூட்டிவிட்டது போன்று,மெதுவாய் சூரியன் எழுந்து கொண்டிருந்தது .. அங்கு அந்த நீரில் இருந்த சில இறந்த மரங்களில் (dead woods)பறவைகளும் குளிர்காய வந்திருந்தன ………. நாங்களும்​ பக்கத்தில் தெரியும் கிராமத்தின் கொல்லைப்புறத்தையும் ,கபினி  கரையோரத்தில் இருக்கும் மற்ற விடுதிகளையும் பார்த்து கொண்டே எழில் மிகுந்த மரங்களையும்,வரிவரியாய் அசைந்து செல்லும் நீரழைகளையும் ரசித்துக்கொண்டு வந்துகொண்டிருந்தோம்.

கரையோரத்தில் சில மயில்களும்,பறவைகளும்,காட்டுப்பன்றிகளும்  மேய்ந்து கொண்டிருந்தன.நேற்று பார்த்த ஹனுமார் லண்கூர்களும்,கட்டைவிரலை விட சிறிய பறவைகளும் ஆங்காங்கே மரங்களில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தன. இங்கேயும் விலங்குகளும் ,பறவைகளும் அவரவர் நிறங்களுக்கு ஒத்த மரங்களுக்கருகே    மேய்ந்துகொண்டிருந்தன.

திடீரென்று அந்த கைடு  அனைவருயும் அமைதியாக இருக்க சொல்லி எச்சரித்தார். நாங்களும் ஆவலாய் பார்க்க ..உயிருக்கு பயந்து ஒரு சிறிய மான் நடு தண்ணீரில் வேகமாய் நீந்தி மறுகரைக்கு சென்றுகொண்டிருந்தது.அதன் கண்களிலும் ,அசைவிலும் தெரிந்த உயிர் பயம் எங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது .

அங்கே சுமார் ஆறேழு காட்டு நாய்கள் தங்கள் உணவுக்காக இந்த மானைத் துரத்திக் கொண்டிருப்பதை அறிந்து கொண்டோம் . இந்த காட்டு நாய்கள் ,சாதாரமானவை அல்ல சிறுத்தைகளுக்கே  சவால் விடக்கூடியவை…குரைக்குற நாய் கடிக்காது என்று அறிந்திருப்போம்..ஆனால் இந்த நாய்களுக்கு குரைக்கத்  தெரியாது..ஏதோ பறவைகள் போல் கத்திக்கொண்டிருக்கின்றன.கூட்டு முயற்சிக்கும் ,அசாதாரமான வேட்டை வியூகங்களுக்கும் பெயர் பெற்றவை…அதனால் தான் ‘சிங்குளாய் (single) வரும் சிறுத்தைகளுக்கு’ கூட நாம் பயப்பட தேவை இல்லையாம்.ஆனால் இவை ஓரணியாய் திரண்டு,இரையை கலங்கடித்து வேட்டையாடுமாம்.அதன் ஒற்றுமை உணர்வும் ,குடும்ப பாசமும்  :p முதல் நாள் குறும்படத்தில் காட்டப்பட்டது…அதை நேரிலும் கண்டுவிட்டோம் ..


அவை கரையில் இருந்து கொண்டே நீரில் இருக்கும் மானைத் தொடர்ந்தன…நாங்கள் திரும்பி வரும்பொழு மான் இந்த கரை சேர்ந்திருந்தது..ஆனால் நிச்சயம் காட்டு நாய்களுக்கு தான் வெற்றி  என்று உறுதியாகக் கூறலாம்.

மேலும் தொடரும் பொழுது பல வெளிநாட்டுப்ப பறவைகள் கூட்டம் கூட்டமாய்  குடும்பம்​ நடத்திக்கொண்டிருந்தன …எங்களையும் கண்டுகொள்ளவில்லை ..அவை அமைந்திருந்த தோரணை நம்மை நகைக்க வைத்தது..கார்டூன் நெட்வொர்க்கில் வரும் பறவைக் கதாபாதிரங்களைநினைவூட்டியது…நாங்கள் நகைப்புடனே நகர்ந்தோம் ….

​அங்கு ஒரு முதலை கரையோரம் இளைப்பாரிக்கொண்டிருன்தது ….மான் இதனுடன் மாட்டி இருந்தால் என்னாகி இருக்கும் என்று நான் யோசித்து கொண்டிருக்கும் வேளையில்..படகில் ஒருத்தர் நிறைய ஹாலிவூட் படம் பார்ப்பவர் போல…முதலைகள் கூட்டமாய் தானே இருக்கும்…நம் படகை அப்படியே கவிழத்தால் என்னாவது என்பதுபோல் கேள்வி எழுப்பினார். அங்கு நான் கவனித்த பிளாஸ்டிக் காகிதங்கள்….அவை நமக்கு எதிரி அல்ல..நாம் தான் அவைகளைத் தொல்லைப் படுத்திக் கொண்டிருக்கின்றோம் என்று தோன்றியது .

திடீரென்று ரத்த கறைகளுடன் சில உதிர்ந் இறகுகள் மிதந்து கொண்டிருந்தன .ஏதோ விபரீதம் அருகே நடந்து கொண்டிருப்பதை உணர்ந்தோம்…சற்றே மேலே பார்த்தால் (மேலே இடது முதல் படம் ) மஞ்சள் கண் வில்லன் பறவை , மற்றொரு பறவையை அன்றைய காலை உணவாய் சாப்பிட்டுக்கொண்டிருந்தது….அடுத்த ஜென்மத்தில் சுதந்திர பறவையாய் பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட்டேன் !:o

எங்களைப் பார்த்தவுடன் ‘நிம்மதியா சாப்பிட கூட விட மாட்றாங்க,நம் பாட்டுக்கு தனியா இங்க வந்தா கருப்பா ஏதோ வச்சிட்டு (DSLR camera)நம்மளைப் பார்த்துட்டு இருக்காங்க..விவஸ்தை இல்லா மனிதர்கள் என்று நினைத்து போல் பறந்து சென்றது ‘.

ஒரு நல்ல சாட்(shot) மிஸ் ஆகிடுச்சே என்று உச்சு கொட்டியவாறு ,அடுத்து ஏதாவது காட்சி கிடைக்குமா என்று திரும்பினோம் .இந்த வேளையில் எனது காமெராவில் சார்ஜு (battery charge)குறைந்து விட்டடது ……:( இன்னும் சில அருமையான பறவைக் கூட்டங்களை  காமெரா துணையில்லாமல் ரசித்துக்கொண்டே வர சூரியன் உச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது …மூன்று மணி நேர மணித்துளிகள் கடந்ததே தெரியவில்லை …….
கரை திரும்பினோம்.
காடுகளைப் பற்றிய  பிரமிப்பையும்…விலங்கினத்தின் பெருமைகளையும் எடுத்து சொன்ன தோடு மட்டுமல்லாமல்  மீண்டும் இன்னொரு சபாரி(safari) எப்பொழுது செல்வோம் என்ற ஆவலயும் தூண்டியது… இதோ அதன் தாக்கம் தான் இந்த பதிவு!​

© Copyrights photos MangaiMano

Advertisements

2 Responses to “விலங்குகளை விளங்குவோமா ~2”

  1. Ramalakshmi Rajan Says:

    படங்களும் அனுபவம் பற்றிய அழகான விவரிப்பும் பிரமாதம் மங்கை.


Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: