ஆட்டிசம் நாத்திகத்திற்கு வழிவகுக்குமா ?(Does Autism Lead to Atheism?)

சமீபத்தில்  psychologytoday.com என்ற இணையத்தில் உளவியல் பற்றி நான் படித்த ஒரு சுவாரசியமான ஆங்கிலப்பதிவின் தமிழாக்க  பதிவு இது.

ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸாடர் என்பதை தமிழில் மதியிறுக்கம் என்றும் மனயிறுக்கம் என்று சொல்கிறார்கள்.ஆட்டிசம் உடையவர்களில் பலர் நாத்திகர்களாக உள்ளனர் என்பதே இந்த பதிவின் சாரம் . ஸ்பெ‌க்‌ட்ர‌ல் டி‌ஸ்ஆ‌ர்ட‌ர் எ‌ன்று ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல் இ‌ந்த நோ‌ய் அழை‌க்க‌ப்படு‌‌‌கிறது. இ‌ந்த பாதிப்பு உடையவர்கள்
ம‌ற்றவ‌ர்களுட‌ன் உறவை‌ப் பேண முடியாது.பொதுவாக ஆ‌ட்‌டிச‌ம் உள்ளவர்களுக்கு பே‌ச்சு வருவ‌தி‌ல் சி‌க்க‌ல் ஏ‌ற்படு‌ம். சிலரு‌க்கு ந‌ல்ல முறை‌யி‌ல் பே‌ச்சு வருவது‌ம் உ‌ண்டு. ஆ‌ட்டிச‌ம் பா‌தி‌த்தவ‌ர்க‌ள் இ‌ப்படி‌த்தா‌ன் இரு‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்று எ‌ந்த ஒரு வரையறையு‌ம் இரு‌ப்ப‌தி‌‌ல்லை.சிலர் தமக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ளது என்று உணர்ந்திருக்க கூட மாட்டார்கள்.

————————————————–

ஆட்டிசம் நாத்திகத்திற்கு வழிவகுக்குமா ?
கடவுள் நம்பிக்கை மன கோட்பாட்டை சார்ந்தது.
மாத்தியூவ்  ஹட்சன்   in சைக்குடு!(psyched)


பெரும்பாலான மதங்களில், மற்றும் விவாதிக்கக்கூடிய தகுதியுள்ள எந்த மதத்திலும்  , கடவுள் ஒரு மனித சலனத்திற்கு அப்பாற்பட்ட சக்தியோ அல்லது படைப்பாளியோ  இல்லை. மனிதன் தொடர்புகள்ளக்கூடிய மனதினைக் கொண்டவன்.ஒருவேளை நீங்கள் அவருடன் பின்னிரவில் தொலைபேசியில் அரட்டையடிப்பதில்லை.ஆனால் அவர் தனிமனித பண்புகளும் ,எண்ணங்களும்,மனநிலையும், உங்களுடன் தொடர்புகொள்ளவேண்டிய வழிகளும் கொண்டவர். நீங்கள் மனமென்றால் என்ன ?அது எவ்வாறு இயங்குகிறது? என்று அறியவில்லையென்றால் ,மனிதர்களைப் புரிந்து கொள்ள முடியாது,கடவுளைப் புரிந்து கொள்ள முடியாது ,மத விருப்பம் இல்லாதவர்களாய் இருப்பீர்கள்.

அது ஒரு கோட்பாடுதான் .மதத்தினை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் , கடவுள்(கடவுளர்கள்) மீதுள்ள நம்பிக்கை தினசரி சமூக ஆற்றலை (நமது திறன், நாட்டம் மற்றும் மனங்களை பற்றிய நினைப்பு) நம்பியுள்ளது என்று ஒத்துக்கொண்டுள்ளனர்.இதன் அர்த்தம் என்னவென்றால் நீங்கள் ஒரு ஆட்டிசம் உடையவராகவோ அல்லது  ‘மனத்தினைப் புரிய இயலாதவராகவோ ‘  இருந்தால் நீங்கள் ஒரு நாத்திகவாதி .’பிளாஸ் ஒன்’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆராய்ச்சி ஒன்று இந்த கூற்றுக்கான புதிய ஆதாரங்களை வழங்குகிறது .

ஆனால் முதலில் தற்போதுள்ள சான்றுகளைப் பார்ப்போம் !

“கடுமையான ஆட்டிசம் உடைய நபர்களின் சுயசரிதை கணக்குகளின் படி, அவர்களுக்கு கடவுள் ஒரு நபர் என்பதைவிட கொள்கை என்றே நினைக்கின்றனர்  ” என்று ஜெஸ்ஸி பெரிங், 2002 அறிக்கையில் குறிப்பிடுகின்றார்.அவர்/அது ஒரு ஒழுங்கினை வழங்குகின்றதேயன்றி  ,மனித உறவுகள்(விவகாரங்கள்)  மீது அக்கறைக்  கொண்டதாக இல்லை .அவரது யோசனை உணர்ச்சிகளை விட அறிவாற்றல்களையே திருப்திப்படுத்துகிறது.டெம்பிள் கிராண்டின் ,எடுத்துக்காட்டாக ஒருங்கிணைந்த  மில்லியன் துகள்களின் பின்னலை என்று கடவுளை விவரிக்கிறார்.

மனக் குருடு  கோட்பாட்டினை மொழிந்த சைமன் பரோன்-கோஹன் , அதுபோன்ற தெய்வீக கருத்திற்கேற்ப  பின்வருமாறு என்னிடம் கூறினார் .அதாவது “நான் சிலநேரங்களில் மதநம்பிக்கையுடைய ஆட்டிச குறைபாடுடைய மனிதர்களை சந்தித்திருக்கின்றேன் ,அவர்களை பெரும்பாலாக  ஊக்குவிப்பானாக செயல்படுவது  மனிதனாக உருவக்கபடுத்துதலை விட வேத சாஸ்திரங்களின் (இறையியல்) விதிகளே (முறைமை) ஆகும் .

‘மனதினைப் புரிதல்’ என்ற திறனின்  விளைவு  என்பது  தொலைநோக்கோடு  (பொருட்களின் அல்லது நிகழ்வுகளின் நோக்கத்தைக் காண்பது )   சிந்திக்கும் திறனாகும்.பாறையாலும் புயலாலும்  எந்த பயனுமில்லை ஆனால் மணல்வாரியும் மழைத்தூரளுக்கும் உண்டு .ஆச்பெள்கேர் நோய்க்குறிகளுடைய பெண்ணின்  பதிவில் ஒரு குழந்தையைப் போல்  பின்வருமாறு குறிப்பிடுகிறார் .அதாவது “நான் கண்ட உலகமென்பது ஒரு சீரற்ற  சுய-போதுமான முறைமை, அது கட்டப்படவில்லை,வளர்ந்தது”.(நான் சிறுமியாக இருந்த பொழுது  வீடுகளும்,சாலைகளும் தரையிளிந்து வளர்ந்த ஒரு வகையான் பெரிய செடி என்று நினைத்திருந்தேன் ,அவை மனிதர்களால் செய்யப்பட்டது என்று நீங்கள் கூறியிருந்தால் ,நான் ஆச்சர்யப்பட்டிருப்பேன்) ஒரு காரணத்திற்காக தான்  சில விஷயங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளன என்று அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.

மக்கள் ஒரு நிகழ்வை தெய்வீக தலையீடாக பார்த்தால் அல்லது அறிவார்ந்த வடிவமைப்பின்  விழைவாக இருந்தாலும் ,அவர்கள் அவர்களது முடிவைநோக்கிசெல்லும்(தொலைநோக்கு தர்க்கம் )எண்ணப்பாகுபாட்டை நிலைகெட்டு ஓடச்செய்கிறது.அவர்கள் தொடர்புபடுத்தும்  நோக்கத்தில் எதுவுமே இல்லை.பெத்தானி  ஹேவுட், ஜெஸ்ஸி பெரிங்கும் இணைந்து, தனது பிஎச்டி ஆராய்ச்சியில் கண்டுபிடித்தது  யாதெனில் ,நாத்திகர்கள் கூட தங்களுக்கு நடந்த சில விஷயங்கள்  ” ஒரு காரணத்திற்காக ” என்று சொல்கின்றனர் ,எ.கா .அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிப்பதற்காக . ஆனால் ஆஷ்பெர்கர் நோய்க்குறி இருப்பவர்கள்
பிற கட்டுப்பாட்டு  குழுக்களை  விட குறைந்த அளவிலேயே முடிவைநோக்கிய  (தொலைநோக்கு தர்க்கம்) பதில்களைத் தந்துள்ளனர். மற்றும்  பலர் நோக்கத்தைக் குறித்த கேள்விகளைக் குறித்து குழப்பங்களை வெளிப்படுத்தினர் .ஒருவர்  ” ஒரு தற்செயலில்  நீங்கள் பார்த்த அர்த்தம்  ” என்ற வரியினைத் தவறாகப் புரிந்துகொண்டு , “நடைமுறை பயன்பாட்டில், நான் நல்ல ஆடைகளை அணிந்தென்,கண்ணியமாக முடியை சரிபடுத்திக்கொண்டேன் ,தற்செயலாக என்னுடன் நபர்கள் மேலும்  நட்பாக பழகினர்”  என்று எழுதினார்.

இதற்கு முன் கடந்த ஆண்டு  கேதரின் கால்டுவெல்-ஹாரிஸ் மற்றும் பாஸ்டன் பல்கலைக்கழகம் கூட்டுப்பணியாளர்களினால் ஒரு மாநாட்டில் முன்வைக்கப்பட்ட ஆராய்ச்சியில்  நாத்திகத்திற்கும் ஆட்டிசத்திற்கும் இடையேயான வலுவான தொடர்பினைக் கூறுகின்றனர்.கட்டுப்பாட்டு குழுவில் இருந்தவர்களை விட   ஆய்வில் பங்கெடுத்த அதிக செயல்பாட்டுடைய ஆட்டிசம் உடையவர்கள்  பெரும்பாலும் நாத்திகர்களாக இறந்தனர் மற்றும் ஒழுங்கமைப்புடைய மதத்தினைச் சார்ந்து குறைந்த அளவிலேயே இருந்தனர். (அவர்கள் பெரும்பாலும் சுயமாக அமைக்கப்பட்ட  மத சிந்தனைகள் உடையவர்களாகவே இருந்தனர்,டெம்பிள் க்ராண்டினின் சிந்தனையை சற்றே ஒத்திருக்கிறது .)நாத்திகர்கள் கிருஸ்துவர்கள்,யூதர்கள் என்பதைவிட பெரும்பாலும் ஆட்டிச நிரலில் தான் இருந்தனர்.மனத்தினைப்  புரிதலிலுள்ள  பற்றாக்குறைகள் தான் இந்த இணைப்புக்கு பொறுப்பு என்று ஆராய்ச்சியாளர்களினால் விளக்கமுடியவில்லை.

இங்கே தான் புதிய ஆராய்ச்சி உள்ளே வருகிறது.அரா நோரேன்சயன் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வில் கேர்வைஸ்  மற்றும்  காளி நான்கு ஆய்வுகளின் மீது அறிக்கைத் தந்துள்ளனர் .
12 ஆட்டிஸ்ட்டிக் மற்றும் 13 நரம்பியல் ரீதியான இயல்புத்தன்மை மாறுபட்ட பருவ வயதுடையவர்கள் பங்கேற்றனர், மற்றும் நரம்பியல் ரீதியான இயல்புத்தன்மை  மாறுபட்ட நபர்கள்  கடவுளை பத்து மடங்கு அதிகமாக ஆதரித்தனர் .

மேலும் மூன்று ஆய்வுகளுக்கு சென்றனர். அவர்கள்  பல்வேறு  மக்களைக்கொண்ட  ஐக்கிய அமெரிக்க மற்றும் கனடாவில் இருந்து நூற்றுக்கணக்கான  பங்கேற்பாளர்களை சேர்த்தனர்  மற்றும் கடவுள்மீதும்  ,மனத்தினைப்   புரியும்   திறன்களைப் பற்றிய நம்பிக்கை பற்றி பல்வேறு அளவீடுகள் பயன்படுத்தப்பட்டன .அத்தனை மூன்று ஆய்வுகளின் முடிவுகளும் ஒரே பாணியைக் கொண்டிருந்தது.

முதலில்,ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குவாசியன்டு அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தனிப்பட்ட கடவுள் மீது பலவீனமான நம்பிக்கை இருந்தது. (இணைத்த விஷயங்கள் ,”நான்  எண்கள் மீது ஆர்வம் கொண்டேன் “,”நான் சமூக சூழ்நிலைகளை கண்டுபிடித்தேன்”[கடினம்]).இரண்டாவதாக ,மனத்தினை புரிதல் தன்மையில் குறைந்த திறன் இணையுறவை மத்தியஸ்தம் செய்தது.மனத்தினைப் புரிதல் என்பது பச்சாதாப குவாசியண்டு  மூலம்  அளவிடப்படுகிறது ,(மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு ,பதில் செயல்படுவதினையும்   கண்களின் படங்களில் என்ன வெளிப்படுத்துகிறது என்று அறிய தேவையான வேலையையும்  சுயமாக அறிந்து மதிப்பிடுவது).முறைப்படுத்தினால் – இதில் ஆர்வம்   இயந்திர மற்றும் நுண் அமைப்புகளுக்கான சுய ஆர்வம் ஆகியவை ஆட்டிசத்துடன் தொடர்பானது ஆனால் மத்தியஸ்தம் செய்பவையாக இல்லை.மூன்றாவது, ஆண்கள்  பெண்களைவிட  ஒரு தனிப்பட்ட கடவுள் (ஆட்டிசம்  கட்டுபடுத்தும் )மீது குறைந்த அளவே வலுவான நம்பிக்கைக் கொண்டிருந்தனர் ,மேலும் இந்த தொடர்பு கூட  குறைக்கபட்ட மன புரிதலினால்  மத்தியஸ்தம் செய்யப்பட்டது.

உங்களின் வாழ்க்கையில் கடவுளை உணர்வதென்பது  ,அவரை மனநிலை உடைய ஒரு மனிதனாகவோ ,நீங்கள்  வேண்டுபவராகவோ ,உங்களது வேண்டுதலுக்கு பதில் சொல்பவராகவோ ,உங்கள் மீது அக்கறைக் கொண்டவராகவோ நினைத்தால் ஒழிய அது கடினம் தான்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆராய்ச்சி செய்யும்பொழுது நோரேன்சயன்  என்னிடம் கூறினார்.

அவர் மற்றும் அவரது உடன் பணியாற்றியவர்கள் மனத்தினை புரிதலிலுள்ள  பற்றாக்குறைகள் மட்டுமே   நாத்திகத்திற்கான ஒரே வழி இல்லையென்று சுட்டிக்காட்டுகின்றனர்.அங்கு கலாச்சாரம் மற்றும் கல்விக்கான தாக்கங்கள் -வேறு நம்பிக்கைகளுக்கும் வழிவகுக்கின்றன ,சொல்– மற்றும் அறிவாற்றல் பாணி .சிலர் பகுத்தறிவைப் பயன்படுத்தி  மூட நம்பிக்கைகளை இரண்டாவது முறையாக  யூகிக்க அதிகமாக விழைகின்றனர்.

ஆனால் மதமும் மனத்தினை புரிதலும் பற்றிய கண்டுபிடிப்பு எனது புத்தகத்தில் உள்ள வாதத்தை வலியுறுத்துகிறது.மாஜிகள் திங்கிங் (மாய சிந்தனை) நம்மளை மனிதனாக்கும்
தினசரி சிந்தனைகளின் இயல்பான நீட்சி .நமது மூளையைப் பொறுத்த வரையில்  கடவுள் நம்மில் ஒருவரே .

[இந்த பதிவின் பதிப்பு   MagicalThinkingBook.com இணையத்திலும் காணப்படும்]

என்ன நீங்கள் நாத்திக வாதியா ,உங்களுக்கு ஆட்டிச குறைபாடு இருக்கிறதா என்று அறிந்துகொள்ளுங்கள் ?[AQ Test]

additional reads:

Atheism-autism-Controversial-new-study-points-link-two

autismaspergersandatheism

மனதினைப் புரிதல் (mentalize)

முடிவைநோக்கிய (teleologic)  😮  (சரியான வார்த்தை தெரியவில்லை )

முதல் தமிழாக்க முயற்சி .தவறாக இருந்தால் சுட்டிக்காட்டவும்.நன்றி !

tnx:ta.wikitionary

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: