விலங்குகளை விளங்குவோமா ~ 1!

இந்த பதிவு நான் கடந்த வாரம் சென்று வந்த நாகர்ஹோலே தேசிய பூங்கா மற்றும் கபினி ஆற்றேரக்குட்டை(backwaters) காட்டு பகுதியில் வாழும் சில முக்கிய விலங்குகள் மற்றும் பறவைகளின் குணாதசியங்களை பற்றிய கட்டுரை !

கடலோரப் பகுதிகளும் அருவிகள் நிறைந்த மலைப்பகுதிகளைத் தவிர்த்து காட்டுப்பகுதிக்குள் செல்லலாம் என்ற எண்ணத்திற்கு காரணம் இருக்கிறது! அது தான் ஒரு காணொளி ! ஆம் காட்டு ராஜா என்று சொல்லப்படும் சிங்கங்கள் வேட்டையாடிய உணவை எப்படி மனிதர்கள்(ஆப்பரிக்க காட்டுவாசிகள் என்று நினைக்கிறேன் ) தைரியமாக எடுத்து செல்கின்றனர் என்பது பற்றிய காணொளி! மிரண்டு போய்விட்டேன் !!!!

காடே அதிர கர்ஜிக்கும் ,”ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்னு வெயிட்டுடா” என்று மிரளவைக்கும் பூனைக்குடும்பத்தை சேர்ந்த சிங்கங்களை ஒற்றைக் கம்பும் ,நேர்கொண்ட பார்வையுடன் அது வேட்டையாடிய உணவை அந்த மனிதர்கள் அபகரித்துவிட்டு ,சிங்கங்களை சட்டைசெய்யாமல் திரும்பிகூட பாக்காமல் அந்த மனிதர்கள் எடுத்து சென்ற தோரணை ! ,எத்தனை பெரியவன் மனிதன் என்ற நினைப்பைத் தந்ததற்கும் மேலாக , நாமும் அந்த விலங்குகளுடன் வாழ்ந்து வந்த ஆறு அறிவுகளைக்கொண்ட ஒரு விலங்குதான் என்ற நினைப்புதான் வந்தது !

இந்த காணொளி ஏன் நாமும் ஆபரிக்க சபாரி செல்ல முடியாவிட்டாலும், அருகில் கபினிக்கு செல்லக்கூடாது???? என்ற நினைப்பைத் தந்தது !

முதல் நாள் அடர்ந்த நாகர்கோலே காட்டுபகுதியில் சர்வ சாதாரணமாய் புள்ளி மான்களைக் காண முடிந்தது ….அவை ஏன் காட்டுக்குள் அடர்ந்த பகுதிக்குள் வாழாமல் ,சாலை ஓரத்தில் புட்களைக் கூட்டம் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன ….அடிக்கடி மகிழுந்துகளையும்,பேருந்துகளை பார்க்கின்றன போலும் ,மருட்சியுடன் காமெராவுக்கு போஸ் கொடுத்தன ,உண்மையில் அவற்றிற்கு பாதுகாப்பான இடம் அடர்த்தி குறைந்த புல்வெளிகள் தான் ,மறைந்திருந்து புலிகளும்,சிறுத்தைகளும்,காட்டு நாய்களும் அவற்றை தாக்காமலிருக்க உதவும்.
]

அப்புறம் யோகிகள் போல காட்சியளிக்கும் ஹனுமார் லண்கூர்களைப் மரத்துக்கு மரம் பார்க்க முடிந்தது ,அவையும் பரம சாது இன்னும் அதற்கு மனிதன் கோக்ககோலாவும் லேஸ் சிப்சும் தந்து பழக்கவில்லை , அதனால் தானுண்டு தன வேலையுண்டு என்று இருந்தன!. பல்லாண்டுகளுக்கு முன் பாத யாத்திரை செல்லும் துறவிகளுக்கு உறுதுணையாக அவர்களின் மூட்டையைக் கொண்டுவந்தும் கொடிய விலங்குகள் வந்தால் எச்சரிக்கவும் செய்திருக்கிறது ,இந்த குரங்குகள் இவை அந்த மான்களுக்கு மரத்திலுள்ள பழங்களை உளுப்பிவிட்டு உதவி செய்யுமாம் , மேலும் கொடிய விலங்குகள் வந்தால் மரத்திலிருந்து(உயரமான மரங்களில் கூட ஏறி தனது அசாதாரமான பார்வைத்திரனால் அன்னியர்களையும்,கொடிய விலங்குகளையும் கண்டுகொள்ளுமாம்), மான்களுக்கு எச்சரிக்கை தருமாம்.மானும் தனது அசாதாரமான நுகரும் திறன் கொண்டு சிருத்தலை புலிகள் வந்தால் எச்சரிக்கை தருமாம்.

நாங்கள் கபினி காட்டில் பார்த்தது,ஒரு யானை உப்பிர்காக மண்ணை மேய்ந்துகொண்டிருந்தது,யானைகளுக்கு பார்வைத்திறன் குறைவு,அருகில் எங்கள் ஜீப் இருந்தும் அது கவனிக்கவில்லை, எங்கிருந்தோ வந்த ஹனுமார் லங்கூர் மெதுவாக அந்த யானையை எச்சரிக்கை செய்தது …சத்தம் எழுப்பியதா என்று தெரியவில்லை ..அந்த யானை சட்டென்று புதருக்குள் ஓடி மறைந்தது. இத்தனை நல்ல குரங்குகள் மரம் ஏறும் சிறுத்தை புலிகளுக்கு இரையாவது சோகம் 😦
அடுத்து இரவில் வனப்பகுதியில் பைசன்களின் கூட்டம் ,நமது வாகனத்திலிருந்து வெளிவரும் விளக்குவேளிச்ச்காத்தில் அவை கண்கள் ரத்தசிவப்பாக தெரியும், கால்களில் வெள்ளை நிற சாக்ஸ் அணிந்தது போன்று இருந்தது,இரவில் வெளிவரும் குணத்தைக்கொண்டது ,எருமை மாடு போன்று சோம்பேறியாக தோன்றினாலும்,கூட்டமாக சேர்ந்து வாகனங்களைத் தாக்கிய கதைகள் பல சொன்னார்கள் .

சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக :

This slideshow requires JavaScript.


சில காட்டு யானைகள் குட்டியுடன் மேய்ந்து கொண்டிருந்த எங்கள் ஜீப்பை பார்த்தவுடன் தனது குட்டிகளை மறைத்துக்கொண்டு ஓடி ஒளிந்து கொண்டன …மற்ற தாய் விலங்குகள் போல யானையும் அதன் குட்டிக்கு மனிதனால் ஆபத்து நேருமென்று நினைத்தால்,  நிச்சயம் தாக்கும்!!!!

மேலும் அழகிய பறவைகளும்(மரங் கொத்திகளும் ,மயில்களும்,மீன் கொத்தி பறவைகளையும் ,தேனீ உண்ணும் பச்சைக் குருவியும் ஆங்காங்கே காணப்பட்டன ).அவை எழுப்பும் ஒலி எதிரொலித்து அந்த காட்டுக்கு ஒரு ரம்யமான சூழலைத் தருகின்றன.

இதில் தேனீ உண்ணும் பச்சைக்குருவி மனிதனின் மன ஓட்டத்தை அறியும் திறன் கொண்டவையாம்,அவர்களால் அபாயமா இல்லையா? என்று தெரிந்து கொண்டு,தனது கூட்டை காட்டிக்கொடுக்கதவாறு நடவடிக்கைகளில் ஈடுப்படுமாம். மண்குளியல் என்றால் அலாதிப் பிரியம் !!

மிகவும் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால்,ஆங்காங்கே வாழும் பறவைகளும் ,விலங்குகளும் அந்த அந்த இடங்களில் இருக்கும் மரங்களின் நிறத்தை ஒத்திருந்தன !இல்லை மறைந்து வாழ தனது தோலின் நிறமுடைய இடங்களுக்கு குடிபெயர்ந்தனவா என்று தெரியவில்லை !
இப்படி   காட்டுபகுதிக்குள்ளேயே ஆச்சிரியங்களும் அனுபவங்களும் கொட்டிக்கிடக்க மறுநாள் அதிகாலை கபினியில் இன்னொரு அனுபவமும் காத்திருந்தது ! அடுத்த பதிவில் ………

Advertisements