பெயிண்டர் ஆப் தி வின்ட் (painter of the wind)


மற்ற கொரியன் நாடகங்களிலிருந்து சிறிது மாறுபட்ட நாடகம் அதிகம்.பொதுவாக கொரியன் நாடக பிரியர்கள்  அதன் மனக்கிளர்ச்சியை ஏற்படுத்த கூடிய நட்பு, நிறைய காதல் கொஞ்சம் சோகம் இவற்றால் கவரப்படிருப்பர்.இதில் இன்னொரு வகை ஓவியத்தின் அழகுணர்ச்சியும்,அவர்களது கலாச்சாரமும் அதிகமாய் ஈர்த்து விடும் .இதில் ஒவ்வொரு நிமிடமும் நாம் நூறு சதவிகிதற்கும் மேலாக ரசிகர்களாய் உணர்ந்து கொண்டிருப்போம்.நிச்சயம் இந்த படம் ரசிகர்கள் பலரை,

1)ஒவியார்களாக்கி இருக்கும் 2)படைப்புகள் மீதும் படைப்பாளிகள் மீதும்  மரியாதையை ஏற்படுத்தி இருக்கும்  3)நமக்கு ஏன் ஓவியத்திறமை இல்லை என்று வருந்த வைத்திருக்கும்.
இதில்  ஒரு பெண்தான் ஹீரோ .அதுவும் நமது மூன் கங் எங் அதாங்க மை லிட்டில் பிரைட்,இந்த பெண்ணின் நடிப்பால் நம்மை மறுபடியும் ஈர்த்துவிட்டார்.ஓவியருக்கு பிறந்த ஓவியம் …துடுக்கான ஓவிய பள்ளி மாணவன்,ஏன் அவள் மாணவன் ஆனான் எப்படி ஒரு ஓவியம் அவள் வாழ்கையை எனும் கப்பலை திசை திருப்புகிறது ,ஒளி விளக்காய் ஒரு ஆசிரியர் கிடைக்க போய் சேர வேண்டய இடத்திற்குத்தான் போய் சேர்ந்ததா என்பது தான் கதை.
ஒவ்வொரு கதாபாத்திரமும் எதார்த்தமாய் வாழ்ந்திருக்கின்றன.ஆர்ப்பாட்டமாய் முகபாவனைகளும் சம்பந்தம் இல்லாத உரத்த உரையாடல்களும் இந்த நாடகத்தில் இல்லவே இல்லை.
இதில் அனைவரும் நடிப்புமே எதார்த்தமே ……இதில் நட்பு,காதல்,பாசம்,குரு பக்தி  என்று உறவுகளின் அனைத்து உன்னத உணர்ச்சிகளுக்கும் உயிர் தந்திருக்கிறார்கள்.அவர்களது பண்டைய கலாசாரத்தின் மீது நம் மதிப்பு இன்னும் உயர்கிறது.
இதன் கதை உங்களுக்கு ஆயிரம் தளங்களில் கிடைக்கும்.அதனால் நான் சொல்லவில்லை.இந்த நிமிடம் கூட உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இந்த நாடகம் பார்க்கபட்டு கொண்டிருக்கும்.

1)சின் யூன்புக்காக நடித்திருக்கும் நமது குட்டிப் பெண்(துடுக்கான பார்வையும்,ஓவியம் வரையும் பொழுது தெரியும் ஆர்வமும்,பெண்ணாக வெட்கப்படும் நேரங்களிலும் ..இந்த மாடர்ன் ஆர்ட்  ஈர்க்கிறது).
2)சின் யுன் மீது காதலில் விழும் அழகும் திறமையும் நிறைந்த விலை மாது(அழகாக இருக்கிறது அவரது மொழியும் ,பாவனைகளும் இந்த அழகிய பெண் ஓவியத்தின் மீது காதலும் இரக்கமும் ஏற்படுத்துகின்றன ).3)வில்லியாக வரும் மா மா (ஆர்பாடமில்லாமல் கண்களிலும் உதடுகளிலும் வெறுப்பை எற்படுதிருக்கிறார்).
4)சின் யூன் புக்கின் அண்ணன் (குட்டிபெண்ணுக்கு அரணாகவும்,தங்கைக்காக தந்து உயிரையும் கொடுத்து நமது அன்பையும் அனுதாபத்தையும் பெறுகிறார்).
5) வாத்தியார்  சின் யுங் (திறமையை  மதிக்கும் திறமை சாலியான  குரு,அரசரிடம் மாணவனுக்காக வாதாடும் போது அவர்மேல் உள்ள மதிப்பை உயர்த்துகிறார்) .
6)மதிப்பிற்குரிய அரசர் (தந்து தந்தையின் மீதுள்ள அன்பையும் பாட்டியின் வஞ்சனைகளை உணர்ந்து ,எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நீதி கூறாமல்,உண்மைக்கு செவி கொடுக்கிறார்,திறமை சாலிகளை மதித்து,அவர்களின் ஓவியத் திறமையினைக் கொண்டு  செம்மையான  ஆட்சி எப்படி செய்கிறார் என்பது நமக்கு புதுசு தான்).
இது போக ஓவியப்பள்ளியில் நண்பர்கள் கூட்டம்,பொறாமைப் படும் கூட்டம் என்று பல வகை அரசியல்களை (திறமை சாலிகள் எப்படி அமுக்கப்படுகின்றனர் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள்.
இந்த படத்தினால் கதாசிரியரையும் ,அதற்கு மெனக்கட்டு உயிர் தந்த இயக்குனரையும் ,வாழ்ந்திருக்கும் நடிகர்களையும்,அட்டகாசமான பின்னணி இசையும்,பிரமிப்பூட்டும் ஓவியங்களையும் நாம் பாராட்டியே ஆக வேண்டும் .
காலத்தால் அழியாத காவியமாய் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை :p!
கலை ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம் !
தரவிறக்கம் செய்ய (20 series)

!http://minpakkangal.yolasite.com/