சிறகுகள்

வாழ்க்கைப் பயணமிது
சிறகுகள் தேவைப்படுகிறது
ஒவ்வொருதருனத்திலும்
ஒவ்வொருவிதமாக!

கதகதப்பில் அரவணைக்கப்பட்டுகிடக்க
வலுசேர்த்து
மேலும்பறக்க
மிதியடியாய்  சிலநேரம்
கனவுகள் நினைவாக்க  சிலநேரம் …

தாய் தகப்பனிடம்
கூட்டுக்குள் கிடைக்கும்
சகோதர
பாசத்தில்
பங்கு கொள்ளும்
ரத்தமெனும் சிறகு!

உற்றார் உறவினரிடம்
தோப்புக்குள் கிடைக்கும்
பந்த பாசத்தில்
தழுவிக் கொள்ளும்
சொந்தமெனும் சிறகு!

வகுப்பறைத்  தோழனென
கூடத்தில் கிடைக்கும்
தோள் சாய்ந்து
கற்கும் நன்றாய்
தோழமைச் சிறகு!

Read the rest of this entry »

Advertisements

கண் மூடும் தேசம் இங்கே கண் திறக்கும் தேசம் அங்கே

1909394348_d718c58070.jpgஎங்கோ ஒரு தேசத்தில் சுனாமியால் மாண்டவர்களுக்காக இரக்கப்ப்டும் இவர்கள்,எங்கோ  குஜராத்தில்  பூகம்பத்தில்  புதைந்து போனவர்களுக்காக
இவர்கள் வருந்துகின்றனர்.ஆனால் எட்டிப்பார்த்த தலைமுறையில் வாழ்ந்த ஒரு சக மனிதனை ஒரு உயிரென்றுகூட நினையாமல் வெறுக்கின்றனர்.

ஈழக்கதையும்தான் இதுவே..காவேரி பிரச்சனையும் இதுவே,கஷ்மிர் தீவிரவாதமும் இதுவே…எங்கோ எதற்கு வீட்டுக்கு வெளியே எட்டிப்பாருஙள்  எதிர்வீட்டு கமலா அக்காவும் மாடிவீட்டு விமலா அக்கவும் போடும் தெருக்குழாய் தண்ணீர் சண்டையும் இதுவே
பள்ளிகளே,பெற்றோர்களே தயவு செய்து உங்கள் தேசப்பற்றை உங்கள் சந்ததியினருக்கு ஊற்றாதீர்கள்.அதனால் தானெ இவன் வீட்டுக்காரன்…என் தெருக்காரன்…என் ஊருக்காரன்….என் மாநிலத்துக்காரன்.என்சகோதரன்(ஒரே தாய் நாடாம்). என்று வெறியுடன் எரிகின்றனர் உங்கள் பிள்ளைகள்.
       ஒன்றை சிந்தியுங்கள் உலகை புரட்டிப்போட்ட  உலகப்போர்களும்   ,துண்டாக்கிக்கொண்டிருக்கும்  தீவிரவாதமும் உங்கள் தேசப்பற்றின் பிள்ளைகள் .
யாதும் ஊரே யாவரும் கேளிர்–

வாழப்பழகுங்கள்.
சக மனிதனிடம் மட்டுமல்ல சக உயிர்களையும் நேசியுங்கள்.ஏன்னென்றால் நீங்கள் என்றும் இவர்களுக்கு ஏதாவது ஒருவகையில் கடன் பட்டவர்களாவீர்கள்.

மண்ணை நேசிக்காதீர்கள் மனித மனங்களை நேசிக்கப்பழகுங்கள்
தவறினால்  மண் உங்களை அதற்கு உரமாக்கி மனித மனங்களை ரணமாக்கிவிடும்.உங்கள் சந்ததியயை விளலயாக்கிவிடும்.

நீங்கள் நல்லவர்தான் நிச்சயமாய்  இவர்களும் நல்லவர்கள்தான்.கண்ணைதறவுங்கள் இவரகளையும் வாழவிடுங்கள்

thanx:flickr.com

suspecting me????

Two fingers;—–

2118026971_40d7dabfc7.jpg cigarette

                                  இரட்டைவிரல் இளைஞனே!

உதடுகளின் நரம்புகளைநெருப்பால் சுட்டுக்கொண்டிருக்கும்
இரட்டைவிரல் இளைஞனே!
வாழத்துடிக்கும் முகங்களைப்பார்
வாழ்வைத் தொலைத்து உயிர்மட்டும் கொள்கின்ற
வெடித்துகள்களை சுவாசிக்கின்ற வயிற்றைப்பார்
முதல் புகையின் பொழுது வரும் இருமல்
உன் சாவின் ஓசை !வலிக்கும் மரணம்
நிச்சயம் உனக்குமட்டுமல்ல நண்பா!

உன் பக்கங்களைமட்டும் பற்றவைக்கவில்லை
ஒரு நூலகமே உன்னால் பற்றிக்கொள்ளப்போகிறது
சாபங்களைப் பெறுகிறாய் உன்னை நேசிப்பவர்களிடம்
கருவிலிருக்கும் குழந்தையும் உன்னை வெறுக்கும்
நிகழ்காலத்தில் நெருப்பை ஊதி ஊதி
உன் எதிர்கால குடிசையை எரித்துவிடாதே
இதன் கொடூரம் உன் எலும்புகளைஉருக்கி
உன் உள்ளங்கால் வரை செல்லும்
நீ நடக்கும் பாதைகளெல்லாம் கருகிப்போகும்!


இதோ கேட்கிறது ஒரு குரல்
உன் தாயின் குரல்தான்
மகனே! நான் என்ன செய்ய?
உன்னையும் காப்பாற்ற
தாலாட்டிலே சொல்ல மறந்த செய்தி
இன்று கண்ணீருடன் சொல்கிறேன்
நான் உனக்கு சுவாசம் தந்த தவறோ?
பலர் சுவாசத்தில் நிக்கோட்டின் கலக்கிறாய்
புகைமோட்டத்தில் திசை மாறிப் போகிறாய்
இதோ சிலநெருப்புத் துண்டுகள் தருகிறேன்
புகையிலை செடிகளை வேரோடு கொழுத்திடு
இல்லை உன்னைப்பெற்ற பாவம்
என்னையே புகைசுட்டுக் கொன்றுவிடு
!

appetite of the earth

poempoem
நிலா(
பூமியின் பசிக்கு
பகல் முழுவதும்
வெயிலில் காய்ந்து
பம்பரமாய் சுற்றி
மாலை இளைப்பாறி
இரவுமனைவி காத்திருந்து
தந்தாள் வட்டச்சட்டியில்
கொஞ்சம் சோற்றுக்கஞ்சி

save you!

poy.jpglinkI penned this poem at the age of 15.It is one of my puppy poem. IT bought me a prize in a competition which was held at chennai.I cant remember its name.

Dissolved phoenix

LKUNIK