Kalki diwali malar

image

Read the rest of this entry »

Advertisements

ஆட்டிசம் நாத்திகத்திற்கு வழிவகுக்குமா ?(Does Autism Lead to Atheism?)

சமீபத்தில்  psychologytoday.com என்ற இணையத்தில் உளவியல் பற்றி நான் படித்த ஒரு சுவாரசியமான ஆங்கிலப்பதிவின் தமிழாக்க  பதிவு இது.

ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸாடர் என்பதை தமிழில் மதியிறுக்கம் என்றும் மனயிறுக்கம் என்று சொல்கிறார்கள்.ஆட்டிசம் உடையவர்களில் பலர் நாத்திகர்களாக உள்ளனர் என்பதே இந்த பதிவின் சாரம் . ஸ்பெ‌க்‌ட்ர‌ல் டி‌ஸ்ஆ‌ர்ட‌ர் எ‌ன்று ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல் இ‌ந்த நோ‌ய் அழை‌க்க‌ப்படு‌‌‌கிறது. இ‌ந்த பாதிப்பு உடையவர்கள்
ம‌ற்றவ‌ர்களுட‌ன் உறவை‌ப் பேண முடியாது.பொதுவாக ஆ‌ட்‌டிச‌ம் உள்ளவர்களுக்கு பே‌ச்சு வருவ‌தி‌ல் சி‌க்க‌ல் ஏ‌ற்படு‌ம். சிலரு‌க்கு ந‌ல்ல முறை‌யி‌ல் பே‌ச்சு வருவது‌ம் உ‌ண்டு. ஆ‌ட்டிச‌ம் பா‌தி‌த்தவ‌ர்க‌ள் இ‌ப்படி‌த்தா‌ன் இரு‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்று எ‌ந்த ஒரு வரையறையு‌ம் இரு‌ப்ப‌தி‌‌ல்லை.சிலர் தமக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ளது என்று உணர்ந்திருக்க கூட மாட்டார்கள்.

————————————————–

ஆட்டிசம் நாத்திகத்திற்கு வழிவகுக்குமா ?
கடவுள் நம்பிக்கை மன கோட்பாட்டை சார்ந்தது.
மாத்தியூவ்  ஹட்சன்   in சைக்குடு!(psyched)


பெரும்பாலான மதங்களில், மற்றும் விவாதிக்கக்கூடிய தகுதியுள்ள எந்த மதத்திலும்  , கடவுள் ஒரு மனித சலனத்திற்கு அப்பாற்பட்ட சக்தியோ அல்லது படைப்பாளியோ  இல்லை. மனிதன் தொடர்புகள்ளக்கூடிய மனதினைக் கொண்டவன்.ஒருவேளை நீங்கள் அவருடன் பின்னிரவில் தொலைபேசியில் அரட்டையடிப்பதில்லை.ஆனால் அவர் தனிமனித பண்புகளும் ,எண்ணங்களும்,மனநிலையும், உங்களுடன் தொடர்புகொள்ளவேண்டிய வழிகளும் கொண்டவர். நீங்கள் மனமென்றால் என்ன ?அது எவ்வாறு இயங்குகிறது? என்று அறியவில்லையென்றால் ,மனிதர்களைப் புரிந்து கொள்ள முடியாது,கடவுளைப் புரிந்து கொள்ள முடியாது ,மத விருப்பம் இல்லாதவர்களாய் இருப்பீர்கள்.

அது ஒரு கோட்பாடுதான் .மதத்தினை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் , கடவுள்(கடவுளர்கள்) மீதுள்ள நம்பிக்கை தினசரி சமூக ஆற்றலை (நமது திறன், நாட்டம் மற்றும் மனங்களை பற்றிய நினைப்பு) நம்பியுள்ளது என்று ஒத்துக்கொண்டுள்ளனர்.இதன் அர்த்தம் என்னவென்றால் நீங்கள் ஒரு ஆட்டிசம் உடையவராகவோ அல்லது  ‘மனத்தினைப் புரிய இயலாதவராகவோ ‘  இருந்தால் நீங்கள் ஒரு நாத்திகவாதி .’பிளாஸ் ஒன்’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆராய்ச்சி ஒன்று இந்த கூற்றுக்கான புதிய ஆதாரங்களை வழங்குகிறது .

ஆனால் முதலில் தற்போதுள்ள சான்றுகளைப் பார்ப்போம் !

Read the rest of this entry »

சிறகுகள்

வாழ்க்கைப் பயணமிது
சிறகுகள் தேவைப்படுகிறது
ஒவ்வொருதருனத்திலும்
ஒவ்வொருவிதமாக!

கதகதப்பில் அரவணைக்கப்பட்டுகிடக்க
வலுசேர்த்து
மேலும்பறக்க
மிதியடியாய்  சிலநேரம்
கனவுகள் நினைவாக்க  சிலநேரம் …

தாய் தகப்பனிடம்
கூட்டுக்குள் கிடைக்கும்
சகோதர
பாசத்தில்
பங்கு கொள்ளும்
ரத்தமெனும் சிறகு!

உற்றார் உறவினரிடம்
தோப்புக்குள் கிடைக்கும்
பந்த பாசத்தில்
தழுவிக் கொள்ளும்
சொந்தமெனும் சிறகு!

வகுப்பறைத்  தோழனென
கூடத்தில் கிடைக்கும்
தோள் சாய்ந்து
கற்கும் நன்றாய்
தோழமைச் சிறகு!

Read the rest of this entry »

விலங்குகளை விளங்குவோமா ~2

   விலங்குகளை விளங்குவோமா ~ 1!

   டுத்த  நாள் படகு சவாரிக்கு ஆயத்தமானோம்….(JLR resorts)விடுதி மேலாளர் எங்களிடம் இங்கு உங்களுக்கு அதிர்ஷ்டமென்றால் சிறுத்தைகளை மற்றும் புலிகளை காணமுடியும் என்றார்.நான் அப்பாவியாய் பன்னர்கட்டா   ஜூவில் நிறைய புலிகள் பார்த்திருக்கிறேன்,வெள்ளைப்புலிகள் கூட பார்த்திருக்கிறேன் என்று சொல்ல ,அவர் முகத்தில் கோபம் படர்ந்தது :D.ஆம் கூண்டில் அடைத்து ரோட்டி துண்டு போல் மாமிசம் கொடுத்து வளர்க்கப்படும்  புலிகளுக்கும்,காட்டில் டெர்ரராய் விலங்குகளை வேட்டையாடி வாழும்  புலிக்கும் வித்தியாசம் உண்டுதான் !

அந்த விடுதி முன்னொரு காலத்தில்   வேட்டையாடுவதற்கு மைசூர் மகாராஜா தங்கியிருக்கும் இடமாம் . கபினி அணைக்கட்டின்  ஆற்றேரக்குட்டை(backwaters) கரையில்  விடுதி அமைந்திருந்தது .இந்த மூன்று மணி நேரப் பயணம் தரப்போகும் அனுபவங்களை எதிர்நோக்கி சூரிய உதயத்திற்கு முன் படகில் சில வெளிநாட்டு பயணிகளும் ஒரு கைடுமாக(guide) அமர்ந்தோம். அந்த கைடுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு மறக்கமுடியாத நினைவுதான்.இந்த காட்டுபகுதியில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் ஏராளம் ஏராளம்.அதில் கண்ணில் படும் சொற்ப காட்சிகளும் நமக்கு தரும் ஆச்சிர்யத்திற்கும் பிரமிப்புக்கும் ஈடு இணையே இல்லை. national geography,animal planet,discovery channel பிரியர்கள் நிச்சயம் சபாரியை(safari) (இழக்கக் கூடாது. ​

குளிரில் நடுங்கும் காட்டிற்கு கதகதப்பு தருவதற்காக இயற்கை அன்னை சூரியனை மூட்டிவிட்டது போன்று,மெதுவாய் சூரியன் எழுந்து கொண்டிருந்தது .. அங்கு அந்த நீரில் இருந்த சில இறந்த மரங்களில் (dead woods)பறவைகளும் குளிர்காய வந்திருந்தன ………. நாங்களும்​ பக்கத்தில் தெரியும் கிராமத்தின் கொல்லைப்புறத்தையும் ,கபினி  கரையோரத்தில் இருக்கும் மற்ற விடுதிகளையும் பார்த்து கொண்டே எழில் மிகுந்த மரங்களையும்,வரிவரியாய் அசைந்து செல்லும் நீரழைகளையும் ரசித்துக்கொண்டு வந்துகொண்டிருந்தோம். Read the rest of this entry »

பெயிண்டர் ஆப் தி வின்ட் (painter of the wind)


மற்ற கொரியன் நாடகங்களிலிருந்து சிறிது மாறுபட்ட நாடகம் அதிகம்.பொதுவாக கொரியன் நாடக பிரியர்கள்  அதன் மனக்கிளர்ச்சியை ஏற்படுத்த கூடிய நட்பு, நிறைய காதல் கொஞ்சம் சோகம் இவற்றால் கவரப்படிருப்பர்.இதில் இன்னொரு வகை ஓவியத்தின் அழகுணர்ச்சியும்,அவர்களது கலாச்சாரமும் அதிகமாய் ஈர்த்து விடும் .இதில் ஒவ்வொரு நிமிடமும் நாம் நூறு சதவிகிதற்கும் மேலாக ரசிகர்களாய் உணர்ந்து கொண்டிருப்போம்.நிச்சயம் இந்த படம் ரசிகர்கள் பலரை,

1)ஒவியார்களாக்கி இருக்கும் 2)படைப்புகள் மீதும் படைப்பாளிகள் மீதும்  மரியாதையை ஏற்படுத்தி இருக்கும்  3)நமக்கு ஏன் ஓவியத்திறமை இல்லை என்று வருந்த வைத்திருக்கும்.
இதில்  ஒரு பெண்தான் ஹீரோ .அதுவும் நமது மூன் கங் எங் அதாங்க மை லிட்டில் பிரைட்,இந்த பெண்ணின் நடிப்பால் நம்மை மறுபடியும் ஈர்த்துவிட்டார்.ஓவியருக்கு பிறந்த ஓவியம் …துடுக்கான ஓவிய பள்ளி மாணவன்,ஏன் அவள் மாணவன் ஆனான் எப்படி ஒரு ஓவியம் அவள் வாழ்கையை எனும் கப்பலை திசை திருப்புகிறது ,ஒளி விளக்காய் ஒரு ஆசிரியர் கிடைக்க போய் சேர வேண்டய இடத்திற்குத்தான் போய் சேர்ந்ததா என்பது தான் கதை.
ஒவ்வொரு கதாபாத்திரமும் எதார்த்தமாய் வாழ்ந்திருக்கின்றன.ஆர்ப்பாட்டமாய் முகபாவனைகளும் சம்பந்தம் இல்லாத உரத்த உரையாடல்களும் இந்த நாடகத்தில் இல்லவே இல்லை.
இதில் அனைவரும் நடிப்புமே எதார்த்தமே ……இதில் நட்பு,காதல்,பாசம்,குரு பக்தி  என்று உறவுகளின் அனைத்து உன்னத உணர்ச்சிகளுக்கும் உயிர் தந்திருக்கிறார்கள்.அவர்களது பண்டைய கலாசாரத்தின் மீது நம் மதிப்பு இன்னும் உயர்கிறது.
இதன் கதை உங்களுக்கு ஆயிரம் தளங்களில் கிடைக்கும்.அதனால் நான் சொல்லவில்லை.இந்த நிமிடம் கூட உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இந்த நாடகம் பார்க்கபட்டு கொண்டிருக்கும்.

1)சின் யூன்புக்காக நடித்திருக்கும் நமது குட்டிப் பெண்(துடுக்கான பார்வையும்,ஓவியம் வரையும் பொழுது தெரியும் ஆர்வமும்,பெண்ணாக வெட்கப்படும் நேரங்களிலும் ..இந்த மாடர்ன் ஆர்ட்  ஈர்க்கிறது).
2)சின் யுன் மீது காதலில் விழும் அழகும் திறமையும் நிறைந்த விலை மாது(அழகாக இருக்கிறது அவரது மொழியும் ,பாவனைகளும் இந்த அழகிய பெண் ஓவியத்தின் மீது காதலும் இரக்கமும் ஏற்படுத்துகின்றன ).3)வில்லியாக வரும் மா மா (ஆர்பாடமில்லாமல் கண்களிலும் உதடுகளிலும் வெறுப்பை எற்படுதிருக்கிறார்).
4)சின் யூன் புக்கின் அண்ணன் (குட்டிபெண்ணுக்கு அரணாகவும்,தங்கைக்காக தந்து உயிரையும் கொடுத்து நமது அன்பையும் அனுதாபத்தையும் பெறுகிறார்).
5) வாத்தியார்  சின் யுங் (திறமையை  மதிக்கும் திறமை சாலியான  குரு,அரசரிடம் மாணவனுக்காக வாதாடும் போது அவர்மேல் உள்ள மதிப்பை உயர்த்துகிறார்) .
6)மதிப்பிற்குரிய அரசர் (தந்து தந்தையின் மீதுள்ள அன்பையும் பாட்டியின் வஞ்சனைகளை உணர்ந்து ,எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நீதி கூறாமல்,உண்மைக்கு செவி கொடுக்கிறார்,திறமை சாலிகளை மதித்து,அவர்களின் ஓவியத் திறமையினைக் கொண்டு  செம்மையான  ஆட்சி எப்படி செய்கிறார் என்பது நமக்கு புதுசு தான்).
இது போக ஓவியப்பள்ளியில் நண்பர்கள் கூட்டம்,பொறாமைப் படும் கூட்டம் என்று பல வகை அரசியல்களை (திறமை சாலிகள் எப்படி அமுக்கப்படுகின்றனர் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள்.
இந்த படத்தினால் கதாசிரியரையும் ,அதற்கு மெனக்கட்டு உயிர் தந்த இயக்குனரையும் ,வாழ்ந்திருக்கும் நடிகர்களையும்,அட்டகாசமான பின்னணி இசையும்,பிரமிப்பூட்டும் ஓவியங்களையும் நாம் பாராட்டியே ஆக வேண்டும் .
காலத்தால் அழியாத காவியமாய் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை :p!
கலை ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம் !
தரவிறக்கம் செய்ய (20 series)

!http://minpakkangal.yolasite.com/

விலங்குகளை விளங்குவோமா ~ 1!

இந்த பதிவு நான் கடந்த வாரம் சென்று வந்த நாகர்ஹோலே தேசிய பூங்கா மற்றும் கபினி ஆற்றேரக்குட்டை(backwaters) காட்டு பகுதியில் வாழும் சில முக்கிய விலங்குகள் மற்றும் பறவைகளின் குணாதசியங்களை பற்றிய கட்டுரை !

கடலோரப் பகுதிகளும் அருவிகள் நிறைந்த மலைப்பகுதிகளைத் தவிர்த்து காட்டுப்பகுதிக்குள் செல்லலாம் என்ற எண்ணத்திற்கு காரணம் இருக்கிறது! அது தான் ஒரு காணொளி ! ஆம் காட்டு ராஜா என்று சொல்லப்படும் சிங்கங்கள் வேட்டையாடிய உணவை எப்படி மனிதர்கள்(ஆப்பரிக்க காட்டுவாசிகள் என்று நினைக்கிறேன் ) தைரியமாக எடுத்து செல்கின்றனர் என்பது பற்றிய காணொளி! மிரண்டு போய்விட்டேன் !!!!

காடே அதிர கர்ஜிக்கும் ,”ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்னு வெயிட்டுடா” என்று மிரளவைக்கும் பூனைக்குடும்பத்தை சேர்ந்த சிங்கங்களை ஒற்றைக் கம்பும் ,நேர்கொண்ட பார்வையுடன் அது வேட்டையாடிய உணவை அந்த மனிதர்கள் அபகரித்துவிட்டு ,சிங்கங்களை சட்டைசெய்யாமல் திரும்பிகூட பாக்காமல் அந்த மனிதர்கள் எடுத்து சென்ற தோரணை ! ,எத்தனை பெரியவன் மனிதன் என்ற நினைப்பைத் தந்ததற்கும் மேலாக , நாமும் அந்த விலங்குகளுடன் வாழ்ந்து வந்த ஆறு அறிவுகளைக்கொண்ட ஒரு விலங்குதான் என்ற நினைப்புதான் வந்தது !

இந்த காணொளி ஏன் நாமும் ஆபரிக்க சபாரி செல்ல முடியாவிட்டாலும், அருகில் கபினிக்கு செல்லக்கூடாது???? என்ற நினைப்பைத் தந்தது !

முதல் நாள் அடர்ந்த நாகர்கோலே காட்டுபகுதியில் சர்வ சாதாரணமாய் புள்ளி மான்களைக் காண முடிந்தது ….அவை ஏன் காட்டுக்குள் அடர்ந்த பகுதிக்குள் வாழாமல் ,சாலை ஓரத்தில் புட்களைக் கூட்டம் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன ….அடிக்கடி மகிழுந்துகளையும்,பேருந்துகளை பார்க்கின்றன போலும் ,மருட்சியுடன் காமெராவுக்கு போஸ் கொடுத்தன ,உண்மையில் அவற்றிற்கு பாதுகாப்பான இடம் அடர்த்தி குறைந்த புல்வெளிகள் தான் ,மறைந்திருந்து புலிகளும்,சிறுத்தைகளும்,காட்டு நாய்களும் அவற்றை தாக்காமலிருக்க உதவும்.
]

அப்புறம் யோகிகள் போல காட்சியளிக்கும் ஹனுமார் லண்கூர்களைப் மரத்துக்கு மரம் பார்க்க முடிந்தது ,அவையும் பரம சாது இன்னும் அதற்கு மனிதன் கோக்ககோலாவும் லேஸ் சிப்சும் தந்து பழக்கவில்லை , அதனால் தானுண்டு தன வேலையுண்டு என்று இருந்தன!. பல்லாண்டுகளுக்கு முன் பாத யாத்திரை செல்லும் துறவிகளுக்கு உறுதுணையாக அவர்களின் மூட்டையைக் கொண்டுவந்தும் கொடிய விலங்குகள் வந்தால் எச்சரிக்கவும் செய்திருக்கிறது ,இந்த குரங்குகள் இவை அந்த மான்களுக்கு மரத்திலுள்ள பழங்களை உளுப்பிவிட்டு உதவி செய்யுமாம் , மேலும் கொடிய விலங்குகள் வந்தால் மரத்திலிருந்து(உயரமான மரங்களில் கூட ஏறி தனது அசாதாரமான பார்வைத்திரனால் அன்னியர்களையும்,கொடிய விலங்குகளையும் கண்டுகொள்ளுமாம்), மான்களுக்கு எச்சரிக்கை தருமாம்.மானும் தனது அசாதாரமான நுகரும் திறன் கொண்டு சிருத்தலை புலிகள் வந்தால் எச்சரிக்கை தருமாம்.

நாங்கள் கபினி காட்டில் பார்த்தது,ஒரு யானை உப்பிர்காக மண்ணை மேய்ந்துகொண்டிருந்தது,யானைகளுக்கு பார்வைத்திறன் குறைவு,அருகில் எங்கள் ஜீப் இருந்தும் அது கவனிக்கவில்லை, எங்கிருந்தோ வந்த ஹனுமார் லங்கூர் மெதுவாக அந்த யானையை எச்சரிக்கை செய்தது …சத்தம் எழுப்பியதா என்று தெரியவில்லை ..அந்த யானை சட்டென்று புதருக்குள் ஓடி மறைந்தது. இத்தனை நல்ல குரங்குகள் மரம் ஏறும் சிறுத்தை புலிகளுக்கு இரையாவது சோகம் 😦
அடுத்து இரவில் வனப்பகுதியில் பைசன்களின் கூட்டம் ,நமது வாகனத்திலிருந்து வெளிவரும் விளக்குவேளிச்ச்காத்தில் அவை கண்கள் ரத்தசிவப்பாக தெரியும், கால்களில் வெள்ளை நிற சாக்ஸ் அணிந்தது போன்று இருந்தது,இரவில் வெளிவரும் குணத்தைக்கொண்டது ,எருமை மாடு போன்று சோம்பேறியாக தோன்றினாலும்,கூட்டமாக சேர்ந்து வாகனங்களைத் தாக்கிய கதைகள் பல சொன்னார்கள் .

சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக :

This slideshow requires JavaScript.


சில காட்டு யானைகள் குட்டியுடன் மேய்ந்து கொண்டிருந்த எங்கள் ஜீப்பை பார்த்தவுடன் தனது குட்டிகளை மறைத்துக்கொண்டு ஓடி ஒளிந்து கொண்டன …மற்ற தாய் விலங்குகள் போல யானையும் அதன் குட்டிக்கு மனிதனால் ஆபத்து நேருமென்று நினைத்தால்,  நிச்சயம் தாக்கும்!!!!

மேலும் அழகிய பறவைகளும்(மரங் கொத்திகளும் ,மயில்களும்,மீன் கொத்தி பறவைகளையும் ,தேனீ உண்ணும் பச்சைக் குருவியும் ஆங்காங்கே காணப்பட்டன ).அவை எழுப்பும் ஒலி எதிரொலித்து அந்த காட்டுக்கு ஒரு ரம்யமான சூழலைத் தருகின்றன.

இதில் தேனீ உண்ணும் பச்சைக்குருவி மனிதனின் மன ஓட்டத்தை அறியும் திறன் கொண்டவையாம்,அவர்களால் அபாயமா இல்லையா? என்று தெரிந்து கொண்டு,தனது கூட்டை காட்டிக்கொடுக்கதவாறு நடவடிக்கைகளில் ஈடுப்படுமாம். மண்குளியல் என்றால் அலாதிப் பிரியம் !!

மிகவும் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால்,ஆங்காங்கே வாழும் பறவைகளும் ,விலங்குகளும் அந்த அந்த இடங்களில் இருக்கும் மரங்களின் நிறத்தை ஒத்திருந்தன !இல்லை மறைந்து வாழ தனது தோலின் நிறமுடைய இடங்களுக்கு குடிபெயர்ந்தனவா என்று தெரியவில்லை !
இப்படி   காட்டுபகுதிக்குள்ளேயே ஆச்சிரியங்களும் அனுபவங்களும் கொட்டிக்கிடக்க மறுநாள் அதிகாலை கபினியில் இன்னொரு அனுபவமும் காத்திருந்தது ! அடுத்த பதிவில் ………

மண்ணிலே கலை வண்ணம் கண்டார் !

புகைப்படம் வடக்கு வாசல் அட்டைப் படத்தில்

அதீதத்திற்கும் ,வடக்கு வாசலுக்கும் ,குங்குமமிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்!

பிரதிபலன் எதிர்பாராமல் என்னை புகைப்படமெடுக்க அனுமதித்த  மண்பாண்ட கலைஞருக்கும்
எனது நன்றி !